சர்வதேச பயணிகள் விமானத்திற்கான தடை மேலும் நீட்டிப்பு- மத்திய அரசு


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 9 Dec 2021 8:59 PM IST (Updated: 9 Dec 2021 8:59 PM IST)
t-max-icont-min-icon

சர்வதேச பயணிகள் விமானத்திற்கான தடையை மேலும் நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி,

கொரோனா தொற்றுநோய் பரவல் காரணமாக நாட்டில் சர்வதேச பயணிகள் விமான போக்குவரத்து கடந்த ஆண்டு மார்ச் 23-ஆம் தேதி முதல் நிறுத்தப்பட்டது. பின்னர் நோய்த்தொற்று குறைந்த நிலையில், கட்டுப்பாடுகளுடன் சில குறிப்பிட்ட நாடுகளுக்கு மட்டும் சிறப்பு சர்வதேச விமானங்களாக இயக்கப்பட்டு வந்தது.

இதற்கிடையில் சர்வதேச பயணிகள் விமானங்கள் டிசம்பர் 15 முதல்  வழக்கம்போல தொடங்க இந்தியா திட்டமிட்டிருந்தது. இந்த நிலையில், புதிய வகை ஒமைக்ரான் பரவலை கருத்தில் கொண்டு, மத்திய அரசு மீண்டும் சர்வதேச பயணிகள் விமானங்களுக்கான தடையை நீட்டிக்க முடிவு செய்தது. 

அதன்படி, சர்வதேச பயணிகள் விமானங்களுக்கான தடையை ஜனவரி 31, 2022 வரை நீட்டித்து மத்திய பயணிகள் விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.

மேலும், சர்வதேச சரக்கு விமான போக்குவரத்து மற்றும் குறிப்பிட்ட நாடுகளுக்கு கட்டுப்பாடுடன் மேற்கொள்ளும் விமானப்போக்குவரத்து சேவை தொடரும் எனவும் மத்திய பயணிகள் விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.


Next Story