முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உடலுக்கு பிரதமர் மோடி அஞ்சலி


முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உடலுக்கு பிரதமர் மோடி அஞ்சலி
x
தினத்தந்தி 9 Dec 2021 9:09 PM IST (Updated: 9 Dec 2021 9:09 PM IST)
t-max-icont-min-icon

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த பிபின் ராவத் உள்பட 13 பேரின் உடலுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்.

டெல்லி,

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நேற்று நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். 

உயிரிழந்த 13 பேரின் உடல்கள் கோவையில் இருந்து இன்று மாலை டெல்லி கொண்டு செல்லப்பட்டது. டெல்லியில் உள்ள பாலம் விமானப்படை விமான நிலையத்தில் 13 பேரின் உடல்களும் இறுதி அஞ்சலி செலுத்த வைக்கப்பட்டன. உயிரிழந்த 13 பேரின் உடலுக்கு அவர்களது உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், விமானப்படை விமான நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேரின் உடலுக்கு பிரதமர் மோடி நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். 13 பேரின் உடலுக்கு பிரதமர் மோடி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

பிரதமர் மோடியை தொடர்ந்து பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் உயிரிழந்த 13 பேரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். இதனை தொடர்ந்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் அஞ்சலி செலுத்தினார். மேலும், முப்படைகளின் தளபதிகளும் உயிரிழந்த 13 பேரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

Next Story