விவசாயிகள் போராட்டம் வாபஸ்: ‘அதிகாரத்தின் ஆணவம் தோற்று இருக்கிறது’ - காங்கிரஸ்
விவசாயிகள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது தொடர்பாக காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் நடத்தி வந்த போராட்டம் திரும்ப பெறப்பட்டு உள்ளது. இதை காங்கிரஸ் கட்சி வரவேற்று உள்ளது.
கடந்த ஓராண்டாக நடந்த இந்த போராட்டத்தின் முக்கியமான நிகழ்வுகள் குறித்த வீடியோ ஒன்றை தனது டுவிட்டர் தளத்தில் பகிர்ந்திருந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இது உண்மையின் வெற்றி எனவும், போராட்டத்தில் உயிர் நீத்த விவசாயிகளின் தியாகம் எப்போதும் நினைவுகூரப்படும் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.
இதைப்போல கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா, ‘விவசாயிகளின் மன உறுதி வென்று இருக்கிறது, அதிகாரத்தின் ஆணவம் இன்று தோல்வி அடைந்து இருக்கிறது’ என்று தெரிவித்து உள்ளார்.
விவசாயிகளின் போராட்டம் முடிவுக்கு வந்தாலும், அவர்களது துயரம் தொடரும் என்றும் காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.
Related Tags :
Next Story