பள்ளித்தோழியை கரம் பிடித்தார் பீகார் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ்...!


பள்ளித்தோழியை கரம் பிடித்தார் பீகார் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ்...!
x
தினத்தந்தி 10 Dec 2021 10:32 AM IST (Updated: 10 Dec 2021 10:32 AM IST)
t-max-icont-min-icon

தனது சிறு வயது தோழியும், அரியானா தொழில் அதிபர் ஒருவரின் மகளுமான ராகேல் ஐரிஸ் என்பவரை கரம் பிடித்தார்.

பாட்னா,

பீகார் மாநில முன்–னாள் முதல்-மந்–தி–ரி–யும், ராஷ்ட்–ரீய ஜன–தா–தள தலை–வ–ரு–மான லாலு பிர–சாத்–தின் மகன் தேஜஸ்வி யாதவ் (வயது 32). மாநில எதிர்க்–கட்சி தலை–வ–ராக பதவி வகித்து வரும் இவர் லாலு பிர–சாத்–தின் அர–சி–யல் வாரி–சாக கரு–தப்–ப–டு–கி–றார்.

இவ–ருக்கு டெல்–லி–யில் நேற்று திரு–ம–ணம் நடந்–தது. தனது சிறு வயது தோழி–யும், அரி–யானா தொழில் அதி–பர் ஒரு–வ–ரின் மக–ளு–மான ராகேல் ஐரிஸ் என்–ப–வரை கரம் பிடித்–தார்.

இந்த நிகழ்ச்–சி–யில் தேஜஸ்–வி–யின் உடன்–பி–றந்த 8 பேரும், அவர்–க–ளது குடும்–பத்–தி–ன–ரும் கலந்து கொண்–ட–னர். மேலும் லாலு பிர–சாத்–தின் உற–வி–ன–ரும், உத்–த–ர–பி–ர–தேச முன்–னாள் முதல்-மந்–தி–ரி–யு–மான அகி–லேஷ் யாத–வும் இந்த திரு–ம–ணத்–தில் பங்–கேற்–றார்.

தேஜஸ்வி யாத–வின் திரு–ம–ணத்–தை–யொட்டி அவ–ரது சொந்த மாநி–ல–மான பீகா–ரில் கொண்–டாட்–டங்–கள் களை–கட்–டி–யுள்–ளன. ராஷ்ட்–ரீய ஜன–தா–தள தொண்–டர்–கள், தங்–கள் தலை–வ–ரின் திரு–ம–ணத்தை கொண்–டாடி வரு–கின்–ற–னர்.

திரு–மண புகைப்–ப–டங்–களை சமூக வலைத்–த–ளங்–களில் பகிர்ந்–தும் தங்–கள் மகிழ்ச்–சியை பகிர்ந்து வரு–கின்–ற–னர்.


Next Story