காஷ்மீர்: பயங்கரவாதிகள் தாக்குதல் - 2 போலீசார் வீரமரணம்


காஷ்மீர்: பயங்கரவாதிகள் தாக்குதல் - 2 போலீசார் வீரமரணம்
x
தினத்தந்தி 10 Dec 2021 6:30 PM IST (Updated: 10 Dec 2021 6:30 PM IST)
t-max-icont-min-icon

காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 போலீசார் வீரமரணம் அடைந்தனர்.

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பந்திப்புரா மாவட்டம் குஷன் சவுக் பகுதியில் போலீசார் இன்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

அப்போது, அங்கு வந்த பயங்கரவாதிகள் போலீசார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் 2 போலீசார் வீரமரணமடைந்தனர். 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடைபெற்ற பகுதியை சுற்றிவளைத்து தப்பியோடிய பயங்கரவாதிகளை தேடி வருகின்றனர்.

Next Story