தெலுங்கானாவில் 7.3 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்; 4 வெளிநாட்டினர் கைது
தெலுங்கானாவில் அடி வயிற்றில் மறைத்து கடத்தி வந்த 7.3 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
ஐதராபாத்,
தெலுங்கானாவில் உள்ள ஐதராபாத் விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து வந்த விமானத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இதில், சந்தேகத்திற்குரிய வகையிலான 4 பயணிகளிடம் சோதனையிட்டதில் தங்க கடத்தலில் அவர்கள் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. அவர்கள் 4 பேரும் சூடான் நாட்டை சேர்ந்தவர்கள் ஆவர். அடி வயிற்றில் மறைத்து கடத்தி வந்த 7.3 கிலோ தங்கம் அவர்களிடம் இருந்து சுங்க சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூ.3.6 கோடி என கூறப்படுகிறது.
Related Tags :
Next Story