மோடி அரசின் அனைத்து முடிவுகளும் மக்களுக்கு எதிரானதாகவே உள்ளது: காங்கிரஸ் விமர்சனம்


மோடி அரசின் அனைத்து முடிவுகளும் மக்களுக்கு எதிரானதாகவே உள்ளது: காங்கிரஸ் விமர்சனம்
x
தினத்தந்தி 11 Dec 2021 3:32 PM IST (Updated: 11 Dec 2021 3:32 PM IST)
t-max-icont-min-icon

மோடி அரசின் அனைத்து முடிவுகளும் மக்களுக்கு எதிரானதாகவே உள்ளதாக காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.

புதுடெல்லி,

பணவீக்கத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் நளை தேசிய அளவில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. மாநிலங்களில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் அந்தந்த மாநிலங்களின் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். 

ஜெய்பூரில் நடைபெறும் கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.  இது தொடர்பாக இன்று விளக்கம் அளித்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில்  ரன்தீப் சிங் சுர்ஜேவாலா மேலும் கூறியதாவது:- 

மோடி அரசின் அனைத்து நடவடிக்கைகளும் மக்களுக்கு எதிரானதாகவே உள்ளது.  சிறிய மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.  வேலைவாய்ப்பின்மை 10 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்துவிட்டது. 

பணவீக்கம் கட்டுக்குள் வர மோடியையும் பாஜகவையும் தோற்கடிக்க வேண்டும்.  நாட்டில் உள்ள மொத்த பணத்தில் 57 சதவீதம் வெறும் 10 பெரும் பணக்காரர்களிடம் மட்டுமே உள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு பொருளாதார நடவடிக்கைகள் அனைத்தும் தடம்புரண்டுவிட்டன” என்றார். 

Next Story