மராட்டியத்தில் புதிதாக 807 பேருக்கு கொரோனா பாதிப்பு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 11 Dec 2021 10:24 PM IST (Updated: 11 Dec 2021 10:24 PM IST)
t-max-icont-min-icon

மராட்டிய மாநிலத்தில் இன்று புதிதாக 807 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மும்பை,

மராட்டியத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. 

அதன்படி, மராட்டியத்தில் இன்று 807 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அம்மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 66 லட்சத்து 43 ஆயிரத்து 179 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 869 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், மராட்டியத்தில் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 64 லட்சத்து 91 ஆயிரத்து 805 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 6 ஆயிரத்து 452 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு இன்று 20 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மராட்டியத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 41 ஆயிரத்து 243 ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே நேற்று மாநிலத்தில் மொத்தம் 17 ஓமைக்ரான் வைரஸ் பாதிப்புகள் பதிவாகி இருந்தன. அதில் 7 நோயாளிகள் இன்று குணமடைந்ததைத் தொடர்ந்து அவர்கள் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இன்று ஒமைக்ரான் வைரஸ் பாதிப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்று அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Next Story