நதி தூய்மையாக இல்லை என தெரிந்ததால் யோகி ஆதித்யநாத் கங்கையில் குளிக்கவில்லை - அகிலேஷ்
எந்த நதியும் தூய்மையாக இல்லை என தெரிந்ததால் யோகி ஆதித்யநாத் கங்கையில் குளிக்கவில்லை என்று அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோவில் வளாகம்-1 திட்டத்தை பிரதமர் மோடி நேற்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். இதனை தொடர்ந்து கங்கை ஆரத்தி நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி கங்கை நதியில் நீராடினார். இந்த நிகழ்ச்சியில் உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் பங்கேற்றார்.
இந்நிலையில், எந்த நதியும் தூய்மையாக இல்லை என தெரிந்ததால் யோகி ஆதித்யநாத் கங்கையில் குளிக்கவில்லை என்று அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.
இது தொடர்பாக அகிலேஷ் கூறுகையில், எந்த நதியும் தூய்மையாக இல்லை என முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்திற்கு தெரியும். ஆகையில், வாரணாசியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் கங்கை நதியில் மூழ்கி குளிக்க வேண்டாம் என யோகி ஆதித்யநாத் முடிவெடுத்தார். நாம் அனைவரும் ஒன்றிணைந்தால், உத்தரபிரதேச மக்களை சமாதானப்படுத்தி வரும் சட்டமன்ற தேர்தலில் 400 தொகுதிகளில் வெற்றிபெற முடியும்’ என்றார்.
Related Tags :
Next Story