ஜனநாயகம் குறித்து மோடி அரசுக்கு 'டியூசன்’ தேவை - ராகுல்காந்தி


ஜனநாயகம் குறித்து மோடி அரசுக்கு டியூசன்’ தேவை - ராகுல்காந்தி
x
தினத்தந்தி 14 Dec 2021 3:44 PM IST (Updated: 14 Dec 2021 3:44 PM IST)
t-max-icont-min-icon

ஜனநாயகம் குறித்து மோடி அரசுக்கு ‘டியூசன்’ தேவைப்படுகிறது என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

நாடாளுமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற மழைக்கால கூட்டத்தொடரின் போது வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி எதிர்க்கட்சிகள் கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அப்போது, எதிர்க்கட்சிகளை சேர்ந்த சில எம்.பி.க்கள் நாடாளுமன்ற மரபை மீறி மேஜைகள் மீது ஏறியும், கோஷங்களை எழுப்பியும், கோப்புகளை தூக்கி எறிந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகளை சேர்ந்த 12 எம்.பி.க்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க நாடாளுமன்ற விவகாரத்துறை பரிந்துரை செய்தது. 

இதனை தொடர்ந்து எதிக்கட்சி எம்.பி.க்கள் 12 பேர் நடப்பு குளிர்கால கூட்டத்தொடரில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்த சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற அவை பங்கேற்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், 12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிகழ்வு தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், ஜனநாயகத்தில் விவாதம் மற்றும் கருத்து வேறுபாட்டின் முக்கியத்துவம் குறித்து மோடி அரசுக்கு டியூசன் தேவைப்படுகிறது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 More update

Next Story