செல்போனுக்காக பெண்ணை நடுரோட்டில் தரதரவென்று இழுத்து சென்ற வீடியோ வைரல்..!


செல்போனுக்காக பெண்ணை  நடுரோட்டில் தரதரவென்று இழுத்து சென்ற வீடியோ வைரல்..!
x
தினத்தந்தி 17 Dec 2021 3:56 PM IST (Updated: 17 Dec 2021 8:12 PM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் நடந்து சென்ற பெண்ணிடம் செல்போனை பறித்து 200 மீ வரை தரதரவென்று இழுத்து சென்ற வீடியோ வைரலாக பரவி வருகிறது.

புதுடெல்லி,

டெல்லி சலிமர் பகா பகுதியில், கடந்த திங்களன்று பெண் ஒருவர் சாலையில் நடந்து சென்று கொண்டியிருந்தார். அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் எதிர்பாராத விதமாகப் பெண்ணிடம் இருந்த செல்போனைப் பறித்தனர்.ஆனால் செல்போனை அந்த பெண் விடுவதாக இல்லை.

இதனால் அந்த பெண்ணை நடு ரோட்டில் சுமார் 200 மீ வரை தரதரவென்று இழுத்துச் சென்றுள்ளனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் வீடியோ எடுக்கப்பட்டு சமூக வளைதங்களில் வைரலாக பரவி வருகிறது.

Next Story