மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரி பணிகளுக்கு ரூ.7.35 கோடி நிதி ஒதுக்கீடு - மத்திய அரசு தகவல்
மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரி பணிகளுக்காக இதுவரை ரூ.7.35 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
நாட்டில் பல்வேறு நகரங்களில் புதிய எய்ம்ஸ் ஆஸ்பத்திரி கட்டும் பணிகள் நடந்து வருகின்றன. தமிழகத்தில் மதுரை எய்ம்ஸ் மருத்துவ பணிகளில் இன்னும் தொய்வு நிலையே உள்ளது. இந்த நிலையில், எய்ம்ஸ் ஆஸ்பத்திரி பணிகளுக்காக பிரதமரின் சுகாதார பாதுகாப்பு திட்ட நிதியில் இருந்து விடுவிக்கப்பட்ட தொகை பற்றிய விவரங்கள் மக்களவையில் கேள்வியாக கேட்கப்பட்டது.
இதற்கு மத்திய சுகாதாரத்துறை இணை மந்திரி பாரதி பிரவின் பவார் நேற்று எழுத்துப்பூர்வமாக பதில் தெரிவித்து இருந்தார். அதில், மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு கடந்த 2019-2020-ம் ஆண்டு ரூ.3.12 கோடியும், 2020-2021-ம் ஆண்டு ரூ.4.23 கோடியும் என மொத்தம் ரூ.7.35 கோடி விடுவிக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story