கர்நாடகத்தில் புதிதாக 238 பேருக்கு கொரோனா

கர்நாடகத்தில் நேற்று 317 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
கர்நாடகத்தில் நேற்று 1 லட்சத்து 17 ஆயிரத்து 58 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 238 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பெங்களூருவில் 153 பேரும், தட்சிண கன்னடாவில் 19 பேரும், மைசூருவில் 15 பேரும், குடகில் 13 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகத்தில் இதுவரை 5 கோடியே 50 லட்சத்து 93 ஆயித்து 486 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 30 லட்சத்து ஆயிரத்து 792 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் நேற்று கொரோனாவுக்கு 3 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் பெங்களூருவில் 2 பேரும், மைசூருவில் ஒருவரும் அடங்குவர். மாநிலத்தில் இதுவரை மொத்தம் 38 ஆயிரத்து 282 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். நேற்று 317 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 29 லட்சத்து 56 ஆயிரத்து 405 ஆக உயர்ந்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story