சபரிமலையில் பக்தர்கள் கூட்டம்; நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம்
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது.
சபரிமலை,
சபரிமலையில் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ள நிலையில், பக்தர்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். கொரோனா பரவல் காரணமாக அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தற்போது சபரிமலையில் தினசரி 45 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
சபரிமலையில் மண்டல பூஜை வரும் 26 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. இதையடுத்து கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். சபரிமலை ஐயப்பன் கோவிலின் வருவாய் 50 கோடியை தண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story