பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதிக்கவேண்டும் - கெஜ்ரிவால்


பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதிக்கவேண்டும் - கெஜ்ரிவால்
x
தினத்தந்தி 20 Dec 2021 3:24 PM IST (Updated: 20 Dec 2021 3:24 PM IST)
t-max-icont-min-icon

பூஸ்டர் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதிக்கவேண்டும் என அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

இந்தியாவில் ஒமைக்ரான் பரவி வருவதால் கட்டுப்பாடுகளை அதிகரிக்கும் நடவடிக்கையில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டு வருகின்றன. இதற்கிடையில், தலைநகர் டெல்லியில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத்தொடங்கியுள்ளது.

டெல்லியில் கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு நேற்று ஒரேநாளில் 107 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், டெல்லியில் இதுவரை 22 பேருக்கு ஒமைக்ரான் தொற்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது தொடர்பாக அம்மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இன்று கூறியதாவது:-

கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மாதிரிகள் ஒமைக்ரான் பாதிப்பு உள்ளதா? என்பதை ஆய்வு செய்ய மரபணு வரிசை பரிசோதனைக்கு உட்படுத்தப்படும்.

பூஸ்டர் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதிக்கவேண்டும் . இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதிக்கவேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன்’ என்றார்.

Next Story