ஜம்மு-காஷ்மீர் மின்பகிர்மானத்தை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கு எதிர்ப்பு - ஊழியர்கள் போராட்டம்


ஜம்மு-காஷ்மீர் மின்பகிர்மானத்தை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கு எதிர்ப்பு - ஊழியர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 20 Dec 2021 4:25 PM IST (Updated: 20 Dec 2021 4:25 PM IST)
t-max-icont-min-icon

ஜம்மு-காஷ்மீர் மின்பகிர்மான அமைப்பை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து யூனியன் பிரதேச ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீர் மின் உற்பத்தி துறையை மத்திய அரசின் மின் பகிர்மான கழகத்துடன் இணைக்க யூனியன் பிரதேச அரசு முடிவு செய்துள்ளது.

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேச அரசின் இந்த முடிவுக்கு அங்கு பணிபுரியும் மின்வாரியத்துறை ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், ஜம்மு காஷ்மீர் அரசு மற்றும் மத்திய அரசின் இந்த முடிவை திரும்பப்பெற வேண்டும் என்ற கோரிக்கையுடன் மின்வாரியத்துறை ஊழியர்கள் பணிகளை புறக்கணித்து கடந்த வெள்ளிக்கிழமை முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதனால், மின் தடை ஏற்பட்டுள்ள பகுதிகளில் மீண்டும் மின் விநியோகத்தை கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டது. ஊழியர்கள் போராட்டத்தில் இறங்கியதால் ஜம்மு-காஷ்மீரில் பல இடங்களில் மின்சாரம் தடைபட்டது.

இதனை தொடர்ந்து, ராணுவம் உதவிக்கு அழைக்கப்பட்டது. ராணுவத்தில் உள்ள மின்துறை ஊழியர்கள் ஜம்மு-காஷ்மீர் மின் பகிர்மான நிலையங்களுக்கு சென்று சீரான மின் விநியோகம் இருப்பதை உறுதி செய்தனர். இதனால், காஷ்மீரில் மின் விநியோகம் சீரடைந்துள்ளது. அதேபோல், ஜம்முவில் 15-20 சதவிகித பாதிப்பு ஏற்பட்டுள்ளபோதும் அந்த பாதிப்பு ராணுவம் மூலம் சரிசெய்யப்பட்டு வருவதாக யூனியன் பிரதேச அரசு தெரிவித்துள்ளது.

Next Story