டெல்லி விமான நிலையத்தில் சிக்கிய 14 கோடி மதிப்புள்ள போதைப்பொருள்: உகாண்டா பெண் கைது
டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் 14 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருளை கடத்தி வந்த உகாண்டா பெண் கைதுசெய்யப்பட்டார்.
புதுடெல்லி,
உகாண்டாவை சேர்ந்த பெண் ஒருவர் துபாயிலிருந்து டெல்லி வந்துள்ளார். அவரை சர்வதேச விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது அவர் சில பொருட்களை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் முழுமையான சோதனை செய்ததில் அவர் போதைப்பொருளை கடத்தி வந்தது தெரியவந்தது.
அவர் கடத்திவந்தது ஹெராயின் போதைப்பொருள் என்றும், சர்வதேச சந்தையில் அதன் மதிப்பு 14.14 கோடி இருக்கும் என்று சுங்கத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அப்பெண்ணை கைது செய்த அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story