தடுப்பூசி செலுத்தாதவர்கள் பொதுப்போக்குவரத்தை பயன்படுத்த அனுமதிப்பது பிறர் உயிருக்கு ஆபத்து - மராட்டிய அரசு


தடுப்பூசி செலுத்தாதவர்கள் பொதுப்போக்குவரத்தை பயன்படுத்த அனுமதிப்பது பிறர் உயிருக்கு ஆபத்து - மராட்டிய அரசு
x
தினத்தந்தி 22 Dec 2021 6:00 PM IST (Updated: 22 Dec 2021 6:00 PM IST)
t-max-icont-min-icon

தடுப்பூசி செலுத்தாதவர்களை பொதுப்போக்குவரத்தை பயன்படுத்த அனுமதிப்பது கொரோனா உருமாற்றத்தை ஏற்படுத்த அழைப்பு விடுக்கும் என மராட்டிய அரசு தெரிவித்துள்ளது.

மும்பை,

கொரோனா பரவலை கருத்தில் கொண்டு இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் மட்டுமே பொதுப்போக்குவரத்தை பயன்படுத்த அனுமதிக்கப்படுவர் என மராட்டிய அரசு கடந்த மாதம் உத்தரவிட்டது. தடுப்பூசியின் இரண்டு டோஸ் செலுத்திக்கொள்ளாதவர்கள் அம்மாநிலத்தில் பொதுபோக்குவரத்தை பயன்படுத்த அரசு தடை விதித்தது.

மராட்டிய அரசின் இந்த முடிவு பாரபட்சமானது. இது அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என கூறி மும்பை ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மராட்டிய அரசு தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர், பொதுப்போக்குவரத்தில் தடுப்பூசி செலுத்தியவர்களுடன் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களை சேர்ப்பது பிறரின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும். இது கொரோனா வைரஸ் பரவல் மற்றும் அதன் உருமாற்றம் ஏற்பட அழைப்பு விடுக்கும்’ என்றார்.

இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை அடுத்த ஆண்டு ஜனவரி 3-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.   

Next Story