வீட்டில் இருக்கும்போதும் மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும்; மராட்டிய துணை முதல்-மந்திரி
மக்கள் வீட்டில் இருக்கும்போதும் முகக்கவசம் அணிய வேண்டும் என மராட்டிய துணை முதல்-மந்திரி தெரிவித்துள்ளார்.
மும்பை,
இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு அதிகரிக்கத்தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் இதுவரை 269 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவற்றில் அதிகபட்சமாக மராட்டிய மாநிலத்தில் 65 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மராட்டியத்தில் கொரோனா பாதிப்புடன் தற்போது ஒமைக்ரானும் வேகமெடுத்துள்ளதால் வைரஸ் பரவலை தடுக்க மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.
இந்நிலையில், மாநிலத்தில் அதிகரித்து வரும் ஒமைக்ரான் பரவல் தொடர்பாக மராட்டிய துணை முதல்-மந்திரி அஜித் பவார் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்த விவகாரத்தை நாம் தீவிரமாக எடுத்துக்கொள்ளவேண்டும். ஊரடங்கை அமல்படுத்த நாங்கள் விரும்பவில்லை. வீட்டில் இருக்கும்போதும் மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும். இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சித்தலைவர்கள் பொறுப்புடன் பேசவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்’ என்றார்.
Related Tags :
Next Story