காஷ்மீரில் என்கவுண்டர்: பயங்கரவாதி சுட்டுக்கொலை
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான்.
ஸ்ரீநகர்,
ஜம்மு காஷ்மீரின் ஆனந்த்நாக் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, குறிப்பிட்ட இடத்தை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை குறிவைத்து துப்பாக்கியால் சுட்டனர். சுதாரித்துக்கொண்ட பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். இரு தரப்பினருக்கும் இடையே தொடர்ந்து துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது.
இந்த துப்பாக்கி சண்டையில் தேடப்பட்டு வந்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதி பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டான்.கொல்லப்பட்ட பயங்கரவாதியின் பெயர் பஹீம் பாத் என்பது விசாரணையில் தெரிய வந்தது. இந்த பயங்கரவாதி பிஜ்பேகாரா போலீஸ் நிலயத்தை சேர்ந்த முகமது அஷ்ரப் என்ற போலீஸ் அதிகாரி கொல்லப்பட்ட வழக்கில் தொடர்புடையவன் என காஷ்மீர் போலீசார் தெரிவித்தனர்.
இதுகுறித்து காஷ்மீர் மண்டல போலீசார் டுவிட்டரில் பதிவிட்டுள்ளனர்.
#AnantnagEncounterUpdate: Neutralised #terrorist identified as Faheem Bhat of Kadipora #Anantnag. He has recently joined #terror outfit ISJK and was involved in killing of Martyr ASI Mohd Ashraf, who was posted at PS Bijbehara: IGP Kashmir@JmuKmrPolicehttps://t.co/0zSnVKBufu
— Kashmir Zone Police (@KashmirPolice) December 25, 2021
முன்னதாக நேற்று அன்சார் கஸ்வத் யுஎல்-ஹிந்த் மற்றும் லஷ்கர் இ-தொய்பா தீவிரவாத இயக்கங்களை சேர்ந்த 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
Related Tags :
Next Story