வேளாண் துறையில் டிரோன்களை பயன்படுத்துவதால் 50 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் - நிதின் கட்காரி

வேளாண் துறையில் டிரோன்களை பயன்படுத்துவதற்கான சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
நாக்பூர்,
நாக்பூரில் நடைபெற்ற ஆக்ரோவிஷன் கண்காட்சியின் நிறைவு விழாவில் கலந்துகொண்டு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை மந்திரி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
வேளாண் துறையில் டிரோன்களை பயன்படுத்துவதற்கான சட்டம் இயற்றப்பட வேண்டும். இதுகுறித்து மத்திய வேளாண்துறை மந்திரி நரேந்திர தோமர் மற்றும் மத்திய மந்திரி நாராயண் ரணே ஆகியோருடன் ஆலோசிக்கப்பட்டது.
வேளாண்மை பணிகளில் டிரோன்களை பயன்படுத்துவதன் மூலம் 50 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். கிராமப்புறங்களில் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும்.
மேலும், பேட்டரியை கொண்டு இயக்கப்படும் ஒரு டிரோன்னின் விலை ரூ.6 லட்சம் வரை ஆகும்.அதனை இயக்குவதற்கு பைலட்கள் தேவைப்படுவார்கள் என்பதால் வேலைவாய்ப்பு அதிகரிக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story