காஷ்மீர்: பாதுகாப்பு படையினர் - பயங்கரவாதிகள் இடையே மோதல்


காஷ்மீர்: பாதுகாப்பு படையினர் - பயங்கரவாதிகள் இடையே மோதல்
x
தினத்தந்தி 29 Dec 2021 9:28 PM IST (Updated: 29 Dec 2021 9:28 PM IST)
t-max-icont-min-icon

காஷ்மீரில் பாதுகாப்பு படையினர், பயங்கரவாதிகள் இடையே தற்போது துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது.

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, பாதுகாப்பு படையினர், காஷ்மீர் போலீசாருடன் இணைந்து அப்பகுதியில் இன்று மாலை தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். ஷஹாபாத் பகுதியில் உள்ள நவ்ஹாம் கிராமத்தில் தேடுதல் வேட்டை நடத்தியபோது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த தாக்குதலையடுத்து அப்பகுதியை சுற்றிவளைத்த பாதுகாப்பு படையினரும் பதிலடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். 

பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இரண்டு ராணுவ வீரர்கள், போலீஸ் உள்பட 3 பேர் படுகாயமடைந்தனர். துப்பாக்கிச்சண்டை தொடர்ந்து நடைபெற்று வருவதாக காஷ்மீர் போலீசார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச்சண்டை நடைபெறும் பகுதியில் 2-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Next Story