சென்னையில் கொரோனா அதிகரிப்பு; கட்டுப்பாடுகளை கடுமையாக்க மத்திய அரசு வலியுறுத்தல்
சென்னையில் கொரோனா எண்ணிக்கை அதிகரித்துள்ள சூழலில் கட்டுப்பாடுகளை கடுமையாக்க மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது.
புதுடெல்லி,
தமிழகத்தில் சமீப நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், சென்னையில் கட்டுப்பாடுகளை கடுமையாக்க மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது. இதுபற்றி தமிழக மருத்துவ துறை செயலாளருக்கு, மத்திய சுகாதார துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் கடிதம் எழுதியுள்ளார்.
இதில், சென்னையில் கொரோனா எண்ணிக்கை அதிகரித்துள்ள சூழலில் கட்டுப்பாடுகளை கடுமையாக்கும்படி வலியுறுத்தி உள்ளார்.
கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது, டிசம்பர் முதல் வாரத்தில் 1,088 ஆக இருந்தது. இது 4வது வாரத்தில் 1,720 ஆக உயர்வடைந்து உள்ளது. கடந்த 2 வாரங்களில் சென்னையில் திடீரென கொரோனா பாதிப்பு உயர்ந்து உள்ளது. இதனை சுட்டி காட்டி மத்திய அரசு அறிவுறுத்தல் வழங்கி உள்ளது. தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படியும் வலியுறுத்தி உள்ளது.
சென்னையில் கொரோனாவுக்கான ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை, தடுப்பூசி போடுதல் ஆகியவற்றை அதிகரிக்க வேண்டும் என்று கடிதத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story