தொடர்ந்து 6-வது மாதமாக ஜி.எஸ்.டி வரி வசூல் ரூ.1 லட்சம் கோடியைக் கடந்தது


தொடர்ந்து 6-வது மாதமாக ஜி.எஸ்.டி வரி வசூல் ரூ.1 லட்சம் கோடியைக் கடந்தது
x
தினத்தந்தி 1 Jan 2022 11:17 AM GMT (Updated: 2022-01-01T16:47:22+05:30)

தொடர்ந்து 6-வது மாதமாக டிசம்பரிலும் ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.1 லட்சம் கோடியைக் கடந்துள்ளது.

புதுடெல்லி,

நமது நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு மத்தியிலும் ஜி.எஸ்.டி. என்னும் சரக்கு, சேவைகள் வரி வசூல் அதிகரித்து வருகிறது. தொடர்ந்து 6-வது மாதமாக டிசம்பரிலும் ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.1 லட்சம் கோடியைக் கடந்துள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தைவிடக் கடந்த டிசம்பரில் வருவாய் 13 சதவீதம் அதிகமாகும் என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

நிதி அமைச்சகம் கூறியிருப்பதாவது:- “டிசம்பர் மாதத்தில் ஜிஎஸ்டி வரி ரூ.1 லட்சத்து 29 ஆயிரத்து 780 கோடி வசூலாகியுள்ளது. இதில் மத்திய ஜிஎஸ்டி வரி ரூ.22 ஆயிரத்து 578 கோடியாகும். மாநில ஜிஎஸ்டி வரி ரூ.28 ஆயிரத்து 658 கோடியாகும். ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வரி ரூ.69 ஆயிரத்து 155 கோடியாகும். இதில் செஸ் வரியாக ரூ.9 ஆயிரத்து 389 கோடி கிடைத்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story