எல்லை கட்டுப்பாட்டு பகுதியை ஒட்டி பாங்காங் ஏரியின் குறுக்கே பாலம் கட்டும் சீனா..!


எல்லை கட்டுப்பாட்டு பகுதியை ஒட்டி பாங்காங் ஏரியின் குறுக்கே பாலம் கட்டும் சீனா..!
x
தினத்தந்தி 3 Jan 2022 4:35 PM GMT (Updated: 3 Jan 2022 4:35 PM GMT)

லடாக்கின் பாங்காங் ஏரியின் குறுக்கே ஏரியின் இரு கரைகளையும் இணைக்கும் வகையில் சீனா பாலம் கட்டுவதாக செயற்கைக்கோள் புகைப்படங்களை வெளியிட்டுள்ளன.

பெய்ஜிங்,

அருணாசல பிரதேசத்தை தெற்கு திபெத் என உரிமை கோரும் சீனா, தொடர்ந்து அங்குள்ள எல்லைப்பகுதிகளில் அடாவடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. சீனாவின் இந்த அத்துமீறிய செயலுக்கு இந்தியாவும் தக்க பதிலடிகளை எடுத்து வருகிறது.  

லடாக்கில் உள்ள பாங்காங் எல்லை தொடர்பாக இந்தியா - சீனா இடையே  நீண்ட நாட்களாக பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் லடாக்கின் பாங்காங் ஏரியின் குறுக்கே ஏரியின் இரு கரைகளையும் இணைக்கும் வகையில் சீனா பாலம் கட்டுவதாக செயற்கைக்கோள் புகைப்படங்களை வெளியிட்டுள்ளன. 

இதுகுறித்து புவி உளவுத் துறை நிபுணர் டேமியன் சைமன் வெளியிட்டுள்ள செயற்கைக்கோள் படங்களில், சீன எல்லைக்குள் வரும் லடாக்கின் பாங்காங் ஏரியின் ஒரு பகுதியில் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்தப் பாலம் ஏரியின் இரு கரைகளும் இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 

 பாங்காங் ஏரியின் இரு கரைகளையும் சீன ராணுவம் விரைவாக பயன்படுத்தும் வகையில் இந்த பாலம் அமையும் என்று கூறப்படுகிறது. சீனாவின் இந்த செயல் மீண்டும் எல்லைப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. 

Next Story