படுகாயங்களுடன் சாலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மயிலை காப்பாற்றிய போலீசார்...!


படுகாயங்களுடன் சாலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மயிலை காப்பாற்றிய போலீசார்...!
x
தினத்தந்தி 6 Jan 2022 7:50 AM GMT (Updated: 2022-01-06T13:20:14+05:30)

மின்சாரம் பாய்ந்ததில் படுகாயங்களுடன் சாலையில் கிடந்த மயிலை போலீசார் காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுடெல்லி,

மின்சாரம் பாய்ந்ததில் படுகாயங்களுடன் சாலையில் கிடந்த மயிலை போலீஸ் காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகர் டெல்லியின் புராரி பகுதியில் போலீஸ் நிலையம் உள்ளது. இந்த போலீஸ் நிலையத்திற்கு கடந்த 3-ம் தேதி வந்த அழைப்பில் மின்சாரம் பாய்ந்ததால் சாலையோரம் ஒரு மயில் படுகாயங்களுடன் கிடப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மயிலை மீட்டு அருகில் உள்ள பறவைகள் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அந்த மயிலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

சிகிச்சைக்கு பின்னர் மயில் உயிர் பிழைத்துள்ளது. மேலும், அந்த மயில் தற்போது காயங்களில் இருந்து மீண்டு வருவதாக பறவைகள் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

தகவல் கிடைத்த உடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மயிலின் உயிரை காப்பாற்றிய போலீசாருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.  


Next Story