கொரோனா விதிமீறல்; சாதாரண நபரோ, பெரிய தலைவரோ சம அளவில் தண்டனை: பசவராஜ் பொம்மை


கொரோனா விதிமீறல்; சாதாரண நபரோ, பெரிய தலைவரோ சம அளவில் தண்டனை:  பசவராஜ் பொம்மை
x
தினத்தந்தி 10 Jan 2022 11:10 AM GMT (Updated: 2022-01-10T16:40:39+05:30)

காங்கிரஸ் பாதயாத்திரை நடத்தும் சூழலில், கொரோனா விதிமீறலில் ஈடுபட்டால் சாதாரண நபரோ அல்லது பெரிய தலைவரோ சம அளவில் தண்டனை கிடைக்கும் என பசவராஜ் பொம்மை எச்சரித்துள்ளார்.


பெங்களூரு,


கர்நாடகாவில் 12 ஆயிரம் கொரோனா பாதிப்புகள் நேற்று பதிவு செய்யப்பட்டன.  இவற்றில் பெங்களூரு நகரில் 9 ஆயிரம் பாதிப்புகள் பதிவாகி அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.  கர்நாடகாவில் பாதிப்பு விகிதம் 6.8 சதவீதம்.  ஆனால் பெங்களூருவில் இது 10 சதவீதம் ஆக உள்ளது.

நாட்டில் கொரோனா பாதிப்பில் 3வது இடத்தில் கர்நாடகா உள்ளது.  அதனால், அதிக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தேவையாக உள்ளன என முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்து உள்ளார்.

தொடர்ந்து அவர் கூறும்போது, கர்நாடகாவில் சாதாரண நபரோ அல்லது பெரிய தலைவரோ கொரோனா விதிமீறலில் ஈடுபட்டால் எந்த வேற்றுமையும் கிடையாது.  சட்டப்படி சம அளவில் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை எச்சரிக்கை விடும் வகையில் தெரிவித்துள்ளார்.

மேகதாது அணை விவகாரத்தில் பாதயாத்திரை மேற்கொண்ட காங்கிரஸ் கட்சிக்காரர்கள் 30 பேர் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்ட நிலையில், பொம்மை இதனை தெரிவித்து உள்ளார்.
Next Story