கர்நாடக முதல் மந்திரி பசவராஜ் பொம்மைக்கு கொரோனா தொற்று


கர்நாடக முதல் மந்திரி பசவராஜ் பொம்மைக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 10 Jan 2022 2:42 PM GMT (Updated: 2022-01-10T20:12:01+05:30)

கர்நாடக முதல் மந்திரி பசவராஜ் பொம்மைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு,

கர்நாடக முதல் மந்திரி பசவராஜ் பொம்மைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான அறிகுறிகளுடன் கொரோனா உறுதி செய்யப்பட்டு இருப்பதாக பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். பசவராஜ் பொம்மை தனது டுவிட்டரில் பதிவிட்டு இருப்பதாவது:  எனது உடல் நிலை நலமாக உள்ளது. தற்போது வீட்டுத்தனிமையில் உள்ளேன்” என்றார். 

கர்நாடக வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் ரைவரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் கர்நாடக பா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீலுக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தனிமைபடுத்தி கொண்டுள்ளார்.

Next Story