திருமலையில் 2-வது மலைப்பாதை திறப்பு


திருமலையில் 2-வது மலைப்பாதை திறப்பு
x
தினத்தந்தி 11 Jan 2022 6:25 PM GMT (Updated: 11 Jan 2022 6:25 PM GMT)

நிலச்சரிவு சீரமைக்கப்பட்டு திருமலையில் 2-வது மலைப்பாதை திறக்கப்பட்டது.

திருமலை,

திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லும் இரண்டாவது மலைப்பாதையில் கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தொடர்ந்து நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகள் நடைபெற்றது. 

இந்த நிலையில் சுமார் 40 நாட்களுக்கு பிறகு சீரமைப்பு பணிகள் தற்போது முடிவடைந்துள்ளது. மேலும் வாகன ஓட்டிகளுக்கான அறிவிப்பு பலகைகள், மின் விளக்குகள் அமைக்கப்பட்டு இன்று இரண்டாவது மலைப்பாதை திறக்கப்பட்டது. இதையடுத்து பாதையில் வாகனங்கள் சென்றன.

Next Story