ஜோடிகளை மாற்றி உல்லாசம்: மனைவிகளை ஈடுபடுத்த கணவர்களின் வழிமுறை- திடுக்கிடும் தகவல்


ஜோடிகளை மாற்றி உல்லாசம்: மனைவிகளை ஈடுபடுத்த கணவர்களின் வழிமுறை- திடுக்கிடும் தகவல்
x
தினத்தந்தி 12 Jan 2022 5:34 AM GMT (Updated: 12 Jan 2022 5:45 AM GMT)

மனைவிகளை மாற்றி உல்லாச வழக்கில் குற்றவாளிகள் கோட்டயம், ஆலப்புழா, மற்றும் எர்ணாகுளம் மாவட்டங்களில் இருந்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள சங்கனாச்சேரியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் போலீசில் பரபரப்பு புகார் அளித்தார். அதில், தனது கணவர் மற்றவர்களுடன் உறவில் ஈடுபட வற்புறுத்துவதாக குறிப்பிட்டு இருந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் மனைவிகளை ஒருவருக்கொருவர் மாற்றிக்கொண்டு உல்லாசம் அனுபவிக்கும் கும்பல் பற்றிய திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

இதனைத்தொடர்ந்து ஆலப்புழை, கோட்டயம் மற்றும் எர்ணாகுளத்தை சேர்ந்த 7 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், முகநூல், டெலிகிராம் ஆகிய சமூக வலைத்தளம் மூலமாக ஒரு குழுவை ரகசியமாக தொடங்கி அந்த குழுவுக்கு ‘கப்பிள்ஸ் மீட்' என்று பெயரிட்டுள்ளது தெரியவந்தது.

இந்த குழுவில் ஆயிரக்கணக்கான தம்பதிகள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். கணவர், மனைவி இருவரும் தங்களது விருப்பத்துடனும், கட்டாயத்தின் பேரிலும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒன்று கூடுவார்கள். சிலநேரம் குழுவில் உள்ள உறுப்பினர்களின் வீடுகளிலும், உல்லாச விடுதிகளிலும் சந்தித்து மனைவிகளை மாற்றிக்கொண்டு உல்லாசம் அனுபவிப்பதும் உண்டு.

சில நேரங்களில் ஒரு பெண் பல ஆண்களின் ஆசைக்கும், ஒரு ஆண் பல பெண்களின் ஆசைக்கும் இணங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

இது குறித்து விசாரணை நடத்தி வரும் போலீசார் கூறியதாவது:-

மனைவிகளை உல்லாசத்திற்கு மாற்றிக்கொள்ளும் கும்பலுடன் தொடர்புடைய 14 சமூகவலைத்தள குழுக்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த குழுவில், கேரளா மட்டுமின்றி வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களும் உறுப்பினர்களாக இணைந்து உள்ளனர். இதுபோன்ற ஒவ்வொரு சமூக ஊடகக் குழுவிலும் சராசரியாக 2,000 தம்பதிகள் செயலில் உள்ளனர்.

சாதாரண மன நிலையோடு இருப்பவர்கள் மனைவிகளை மாற்றி உல்லாசம் அனுபவிக்கும் நிலைக்கு வர மாட்டார்கள். ஆதலால், இந்த கும்பல் போதைப்பொருட்களை பயன்படுத்துகிறதா? என்பது குறித்தும், போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கு தொடர்பு ஏதேனும் உள்ளதா? என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். இந்த சம்பவம் தொடர்பாக மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் வெளிநாட்டுக்கு தப்பி சென்ற முக்கிய புள்ளியை கைது செய்து இந்தியாவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருகிறோம் . 

தொடர்ந்து விசாரணை நடத்தியதில் இந்த சம்பவத்திற்குப் பின்னர் ஒரு பெரிய கும்பல் இருப்பதும் அதில் சில அரசியல் புள்ளிகளும் இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த கும்பல் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ள டெலிகிராம், மெசஞ்சர் செயலிகளை பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

குற்றவாளிகள் கோட்டயம், ஆலப்புழா, மற்றும் எர்ணாகுளம் மாவட்டங்களில் இருந்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

முதலில் டெலிகிராம் அல்லது மெசேஞ்சர் குழுக்களில் சேருவதும் பின்னர் இரண்டு அல்லது மூன்று ஜோடிகள் அவ்வப்போது சந்திப்பதும், அதன் பிறகு மனைவிகளை பரிமாறிக் கொள்வதும் சில நேரங்களில் ஒரு பெண்ணை ஒரே நேரத்தில் மூன்று ஆண்கள் பகிர்ந்து கொள்வதும் நிகழ்ந்து வருவதாகவும், ஒருநாள் உறவுக்கு பணத்திற்கு பதிலாக சில ஆண்கள் தங்கள் மனைவிகளை வழங்குவதாகவும், அந்தக் குழுவில் சில நேரங்களில் இடம்பெற்றுள்ள தனி உறுப்பினர்கள் பணம் கொடுத்து விரும்பியவர்களுடன் உல்லாசம் அனுபவித்து வருவதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

இதே போன்ற சம்பவம் கடந்த 2019ஆம் ஆண்டு காயம்குளத்தில் நடைபெற்று பின்னர் அந்த கும்பலை போலீசார் கைது செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகள் பற்றிய திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. முக்கிய குற்றவாளி 20 ஆன்லைன் குழுக்களில் உறுப்பினராக உள்ளார். போலீசில் 7 பேர் சிக்கியதை தொடர்ந்து ஒவ்வொருவராக ஆன்லைன் குழுக்களில் இருந்து விலகி வருகின்றனர் என கூறினர்.

குற்றம் சாட்டப்பட்ட மூவரில் ஒருவர்பரபரப்பான மனைவி பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட அவர் சவுதி அரேபியாவுக்கு தப்பிச் சென்றார்.

இதற்கிடையில், புகார்தாரரின் சகோதரர் தனது சகோதரிக்கு நேர்ந்த கொடுமைகூறி கூறினார்.

தன் சகோதரி சம்மதிக்கவில்லை என்றால் குழந்தைகளை கொன்று விடுவேன், நான் தற்கொலை செய்து கொள்வேன் என என கணவர் தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார். ஆனால் என் சகோதரி இதில் ஈடுபட விரும்பவில்லை என கூறினார்.

Next Story