ஆடையை சுத்தம் செய்ய கட்டாயப்படுத்திய பெண் போலீஸ் - வைரலாகும் வீடியோ


ஆடையை சுத்தம் செய்ய கட்டாயப்படுத்திய பெண் போலீஸ் - வைரலாகும் வீடியோ
x
தினத்தந்தி 12 Jan 2022 8:18 AM GMT (Updated: 12 Jan 2022 8:18 AM GMT)

அழுக்காக்கிய நபரை பேண்டை துடைக்குமாறு பெண் போலீஸ் கட்டாயப்படுத்திய வீடியோ வைரலாகி வருகிறது.

போபால்,

மத்திய பிரதேச மாநிலம் ரேவா பகுதியில் பைக்கில் பின்னோக்கிச் செல்ல முயன்றபோது, பெண் போலீஸ் ஒருவரின் பேண்டில் சேறு கறை ஏற்பட்டதால் அந்த நபரை பெண் போலீஸ் சுத்தம் செய்யும்படி கட்டாயப்படுத்திய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெளியாகி உள்ள 6 விநாடி வீடியோவில் அந்த நபர் பெண் போலீஸ் மீது சேற்றை தெளிக்கும் காட்சிகள் இல்லை. அந்த வீடியோவில் அந்த நபர் பெண் போலீசின் பேண்டில் ஏற்பட்ட கறையை சிவப்பு துணி ஒன்று கொண்டு துடைக்கிறார். அதன்பின் அந்த பெண் போலீஸ் அந்த நபரை அறைந்துவிட்டு செல்லும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

அந்த வீடியோவில் பெண் போலீசின் முகம் தெரியவில்லை. அவர் வெள்ளைத்துணியால் முகத்தை மூடியிருந்தார். தற்போது அந்த பெண் ஊர்க்காவல் படையைச் சேர்ந்த கான்ஸ்டபிள் சாஷி கலா என்று தெரியவந்துள்ளது.

இதுகுறித்து ரேவா பகுதியின் எஸ்.பி சிவ் குமார், 'நாங்கள் அந்த வீடியோவை பார்த்தோம். இதுகுறித்து யாராவது புகாரளித்தால் அந்த பெண் போலீசின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என்று  தெரிவித்துள்ளார்.

Next Story