தேசிய செய்திகள்

புதுச்சேரியில் தொடரும் கொரோனா பாதிப்பு: புதிதாக 1,471 பேருக்கு தொற்று + "||" + Continuing corona infection in Pondicherry: 1,471 new infections

புதுச்சேரியில் தொடரும் கொரோனா பாதிப்பு: புதிதாக 1,471 பேருக்கு தொற்று

புதுச்சேரியில் தொடரும் கொரோனா பாதிப்பு: புதிதாக 1,471 பேருக்கு தொற்று
புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,471 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி, 

இந்தியாவில் கொரோனா வைரஸ் மீண்டும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கடந்த சில நாட்களாக நாட்டில் கொரோனா பரவல் மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. 

கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டுமென மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியதன் பேரில், பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இரவு நேர ஊரடங்கு, பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன.

இதனிடையே கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு பிறகு புதுவையில் கொரோனா தொற்று பரவல் கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. நாள்தோறும் தொடர்ச்சியாக பாதிப்பு ஏறுமுகத்தில் உள்ளது. 

இந்நிலையில் புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,471 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மாநிலத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 35 ஆயிரத்து 337 ஆக அதிகரித்துள்ளது. தொற்று காரணமாக மேலும் ஒருவர் பலியானதைத்தொடர்ந்து , மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,884 ஆக அதிகரித்துள்ளது. 

அங்கு இதுவரை 1 லட்சத்து 27 ஆயிரத்து 795 பேர் குணமடைந்துள்ளனர். இந்நிலையில் தற்போது 5 ஆயிரத்து 658 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளிலும், வீட்டுத்தனிமையிலும் சிகிக்சை பெற்று வருவதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. புதுவையில் மின்கட்டணம் யூனிட்டுக்கு 35 காசு உயர்வு
புதுவையில் மின்கட்டணம் யூனிட்டுக்கு 35 காசு உயர்த்தப்பட உள்ளது.
2. உலக அளவில் கொரோனா பாதிப்பு 55 சதவீதம் அதிகரிப்பு
உலக அளவில் கொரோனா பாதிப்பு 55 சதவீதம் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
3. டெல்லியில் கொரோனா தொற்று பரவல் விகிதம் 26.22 % ஆக உயர்வு
டெல்லியில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
4. கேரளாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பு
கேரளாவில் 3 மாதங்களுக்குப் பிறகு தொற்று பாதிப்பு மீண்டும் 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
5. இங்கிலாந்தில் புதிதாக 1,20,821 பேருக்கு கொரோனா பாதிப்பு...!
இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,20,821 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.