பெங்களூருவில் மட்டும் 20 ஆயிரத்தை தாண்டி அதிர வைத்த கொரோனா


பெங்களூருவில் மட்டும் 20 ஆயிரத்தை தாண்டி அதிர வைத்த கொரோனா
x
தினத்தந்தி 14 Jan 2022 2:38 PM GMT (Updated: 2022-01-14T20:08:43+05:30)

கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் 28,723- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு,

கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. கடந்த  24 மணி நேரத்தில் 28,723- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தலைநகர் பெங்களூருவில் மட்டும் 20,121- பேருக்கு தொற்று பதிவாகி அதிரவைத்துள்ளது. 

அதேபோல், கர்நாடகாவில் இதுவரை இல்லாத அளவாக இன்று  2 லட்சத்திற்கும் மேற்பட்ட மாதிரிகள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால் மேலும் 14 பேர் உயிரிழந்துள்ளனர். 

கர்நாடக மாநிலத்தில் தொற்று பாதிப்பு விகிதம் 12.98-சதவிகிதமாக உள்ளது. தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 1,41,337- ஆக உயர்ந்துள்ளது. பெங்களூருவில் மட்டும் தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் இருப்பவர்கள் எண்ணிக்கை 1.01-லட்சமாக உயர்ந்துள்ளது.  

கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்தாலும் மருத்துவமனையில் வெறும் 5 முதல் 6 சதவீதம் பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவதாக கர்நாடக சுகாதாரத்துறை மந்திரி தெரிவித்தார். 

Next Story