கேரளா: வரும் 19 முதல் 15-18 வயதுடையோருக்கு பள்ளிகளிலேயே தடுப்பூசி போடும் பணிகள் தொடக்கம்


கேரளா:  வரும் 19 முதல் 15-18 வயதுடையோருக்கு பள்ளிகளிலேயே தடுப்பூசி போடும் பணிகள் தொடக்கம்
x
தினத்தந்தி 16 Jan 2022 8:36 PM GMT (Updated: 16 Jan 2022 8:36 PM GMT)

போடும் பணிகள், தொடக்கம் கேரளாவில் வரும் 19 முதல் 15-18 வயதுடையோருக்கு பள்ளிகளிலேயே தடுப்பூசி போடும் பணிகள் தொடக்கம்திருவனந்தபுரம்,

கேரளாவில் வரும் 19ந்தேதி முதல் 15-18 வயதுடையோருக்கு பள்ளிகளிலேயே தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட உள்ளன.

நாட்டில் கொரோனா 2வது அலையின் தீவிரம் குறைந்தபோதும், கேரளாவில் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து காணப்பட்டது.  கடந்த 24 மணிநேரத்தில் 18,123 பேருக்கு (ஞாயிறு) பாதிப்பு உறுதியானது.

இந்த நிலையில், கேரளாவில் வரும் 19ந்தேதி முதல் 15-18 வயதுடையோருக்கு பள்ளிகளிலேயே தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட உள்ளன.

கேரள கல்வி மந்திரி சிவன்குட்டி மற்றும் சுகாதார மந்திரி வீணா ஜார்ஜ் ஆகியோர் பங்கேற்ற உயர்மட்ட ஆலோனை
கூட்ட முடிவில் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

இதனை தொடர்ந்து, அதற்கான கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளையும் கேரள அரசு வெளியிட்டு உள்ளது.


Next Story