தமிழக ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக மத்திய அரசு விளக்கம்


தமிழக ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக மத்திய அரசு விளக்கம்
x
தினத்தந்தி 17 Jan 2022 3:29 PM GMT (Updated: 17 Jan 2022 3:29 PM GMT)

மாநிலங்கள் மற்றும் மத்திய அமைச்சகங்களிடமிருந்து பெறப்பட்ட 56 பரிந்துரைகளில் 21 மட்டுமே தேர்வு செய்யப்பட்டன என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

குடியரசு தின விழாவில் தமிழக ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது. இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு தமிழக முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இந்த நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.  

மத்திய அரசு கூறியிருப்பதாவது:  எந்தெந்த மாநிலங்களின் ஊர்திகள் பங்கேற்க வேண்டும் என்பதை மத்திய அரசு முடிவு செய்வதில்லை.  மாநிலங்கள் மற்றும் மத்திய அமைச்சகங்களிடமிருந்து பெறப்பட்ட 56 பரிந்துரைகளில் 21 மட்டுமே தேர்வு செய்யப்பட்டன. 

தமிழ்நாடு, கேரளா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் முன்மொழிவுகள் உரிய விவாதங்களுக்குப் பிறகே நிபுணர் குழு நிராகரித்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story