5 மாநில சட்டசபை தேர்தல் : தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை


5 மாநில சட்டசபை தேர்தல் : தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை
x
தினத்தந்தி 22 Jan 2022 1:37 AM GMT (Updated: 2022-01-22T08:07:04+05:30)

5 மாநிலங்களில் இந்த ஆண்டு தொடக்கத்தில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.


உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில்  அடுத்த மாதம்  சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதற்கிடையே, ஒமைக்ரான் வைரஸ் மற்றும் கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது.

இந்நிலையில் சட்டசபை தேர்தல் நடைபெறும் 5 மாநில சுகாதார செயலாளர்கள், மத்திய சுகாதார செயலாளர்களுடன் இந்திய தேர்தல் ஆணையம் இன்று காணொலியில்  ஆலோசனை நடத்த உள்ளது.

உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா,  உத்தரபிரதேசம் 
 ஆகிய மாநிலங்களில் பொதுக்கூட்டம் நடத்த தடை ,மற்றும் சில கட்டுப்படுகள் விதிக்கப்பட்டது  .கட்டுப்பாடுகள் இன்றுடன் முடிவடையும் நிலையில் ஆலோசனை நடத்தப்படவுள்ளது.

ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவதா அல்லது மேலும் நீட்டிப்பதா என்பது குறித்து இன்று முடிவு செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Next Story