மராட்டியத்தில் புதிதாக 416 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு


மராட்டியத்தில்  புதிதாக 416 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு
x
தினத்தந்தி 22 Jan 2022 9:17 PM GMT (Updated: 2022-01-23T02:47:28+05:30)

மராட்டியத்தில் நேற்று புதிதாக 46 ஆயிரத்து 393 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.

மும்பை,

மராட்டியத்தில் நேற்று புதிதாக 46 ஆயிரத்து 393 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. 48 பேர் தொற்றுக்கு பலியானார்கள். மாநிலத்தில் இதுவரை 74 லட்சத்து 66 ஆயிரத்து 420 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 70 லட்சத்து 40 ஆயிரத்து 618 பேர் குணமாகி உள்ளனர். தற்ேபாது 2 லட்சத்து 79 ஆயிரத்து 930 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல மாநிலத்தில் இதுவரை தொற்றுக்கு 1 லட்சத்து 42 ஆயிரத்து 71 பேர் உயிரிழந்து உள்ளனர்.

இதேபோல மாநிலத்தில் மேலும் 416 பேருக்கு ஒமைக்ரான் கண்டறியப்பட்டுள்ளது. இதில் 321 பேர் மும்பையை சேர்ந்தவர்கள். 62 பேர் நாக்பூரையும், மற்றவர்கள் புனே, வார்தா, அமராவதி, பண்டாரா, நாசிக் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் ஆவர். மாநிலத்தில் இதுவரை 2 ஆயிரத்து 759 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 1,225 பேர் குணமாகி உள்ளனர்.

Next Story