எப்போதும் மக்களுக்காக துணை நின்ற மிக சிறந்த தலைவர்; பால் தாக்கரேவுக்கு பிரதமர் மோடி அஞ்சலி


எப்போதும் மக்களுக்காக துணை நின்ற மிக சிறந்த தலைவர்; பால் தாக்கரேவுக்கு பிரதமர் மோடி அஞ்சலி
x
தினத்தந்தி 23 Jan 2022 8:36 AM IST (Updated: 23 Jan 2022 8:36 AM IST)
t-max-icont-min-icon

எப்போதும் மக்களுக்காக துணை நின்ற மிக சிறந்த தலைவராக பால் தாக்கரே நினைவுகூரப்படுவார் என பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.



புதுடெல்லி,



மராட்டியத்தில் சிவசேனா கட்சியை தோற்றுவித்தவர் பால் தாக்கரே .  கடந்த 1926ம் ஆண்டு ஜனவரி 23ந்தேதி மராட்டியத்தின் புனே நகரில் பிறந்த இவர், 1960ம் ஆண்டு ஃப்ரீ பிரஸ் ஜர்னல் என்ற பத்திரிகையில் தனது பணியை தொடங்கினார்.

ஒரு கார்ட்டூனிஸ்ட் (வரைபட கலைஞர்) ஆக பணியை தொடர்ந்த அவர், அதன்பின் 1966ம் ஆண்டு சிவசேனாவை தொடங்கினார்.  மராட்டியத்தின் மக்கள் அல்லது மராத்திகளின் நலனுக்காக அந்த கட்சியை தொடங்கி நடத்தினார்.

கடந்த 2012ம் ஆண்டு நவம்பரில் தனது 86வது வயதில் மாரடைப்பினால் அவர் காலமானார்.  அவரது நினைவு நாளை முன்னிட்டு பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவிட்டுள்ள செய்தியில், பாலாசாகேப் தாக்கரேவின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்.  மக்களுக்காக எப்போதும் துணை நின்ற மிக சிறந்த தலைவர் என எப்போதும் நினைவுகூரப்படுவார் என்று அதில் தெரிவித்து உள்ளார்.

1 More update

Next Story