உத்தரபிரதேச தேர்தல்: ஆக்ரா தொகுதியில் போட்டியிடும் முதல் திருநங்கை


உத்தரபிரதேச தேர்தல்: ஆக்ரா தொகுதியில் போட்டியிடும் முதல் திருநங்கை
x
தினத்தந்தி 25 Jan 2022 4:50 AM GMT (Updated: 25 Jan 2022 4:50 AM GMT)

உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் ஆக்ரா தொகுதியில் முதல் முறையாக திருநங்கை போட்டியிட உள்ளார்.

லக்னோ,

403 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச சட்டசபைக்கு பிப்ரவரி 10-ம் தேதி தொடங்கி மார்ச் 7-ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மார்ச் 10-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட்டுகிறது.

இந்த சட்டசபை தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ், பாஜக, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், எஐஎம்ஐஎம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் களமிறங்க உள்ளன. சுயேட்சையாகவும் பலர் போட்டியிட உள்ளனர்.

இந்நிலையில், உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் ஆக்ரா கண்டோன்மென்ட் தொகுதியில் திருநங்கை ஆகாஷ் சோனி என்ற ராதிகா பாய்  சுயேட்சையாகப் போட்டியிடுகிறார். ஆக்ரா தொகுதியில் போட்டியிடும் முதல் திருநங்கை இவர் ஆவார். 

26 வயதான ராதிகா பாய் சுயேட்சை வேட்பாளராக கடந்த 17-ம் தேதி தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அந்த வேட்புமனு நேற்று அங்கீகரிக்கப்பட்டது.

Next Story