குடியரசு தினம்; சந்தேகத்திற்கு உரிய பயங்கரவாதிகளின் போஸ்டர்களை பொதுவெளியில் ஒட்டிய போலீசார்


குடியரசு தினம்; சந்தேகத்திற்கு உரிய பயங்கரவாதிகளின் போஸ்டர்களை பொதுவெளியில் ஒட்டிய போலீசார்
x
தினத்தந்தி 25 Jan 2022 9:04 AM GMT (Updated: 2022-01-25T14:34:28+05:30)

குடியரசு தினத்தினை முன்னிட்டு சந்தேகத்திற்குரிய பயங்கரவாதிகளின் போஸ்டர்களை போலீசார் பொதுவெளியில் ஒட்டியுள்ளனர்.


புதுடெல்லி,நாட்டில் 73வது குடியரசு தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது.  இதனை முன்னிட்டு டெல்லி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டு உள்ளனர்.  வாகன சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

சந்தேகத்திற்குரிய வகையில் சுற்றி திரியும் நபர்களை கண்காணித்து வருகின்றனர்.  சோதனை சாவடிகளில் வாகனங்களை தடுத்து நிறுத்தி, முறைப்படி சோதனை செய்து வருகின்றனர்.

டெல்லியில் ஆயுத விற்பனை செய்யும் அமைப்பு ஒன்றை கண்டறிந்த சிறப்பு பிரிவு போலீசார் 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  அவர்களிடம் இருந்து 25 ஆயுதங்களையும் கைப்பற்றி உள்ளனர்.  அவர்களில் ஒருவர் உத்தர பிரதேசம் மற்றும் மற்றொருவர் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஆவர்.

குடியரசு தினத்தில் பயங்கரவாத தாக்குதல்களை முறியடிக்கும் வகையில் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.  துப்பாக்கி ஏந்திய போலீசாரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதன் ஒரு பகுதியாக, டெல்லியின் கன்னாட் பகுதியில் அனுமன் கோவில் அருகே, சந்தேகத்திற்குரிய பயங்கரவாதிகளின் போஸ்டர்களை போலீசார் பொதுவெளியில் ஒட்டியுள்ளனர்.  இதேபோன்று பல்வேறு பகுதிகளிலும் பயங்கரவாதிகளின் புகைப்படங்களை போலீசார் ஒட்டி வைத்துள்ளனர்.


Next Story