மராட்டியத்தில் இன்று 33,914 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

மராட்டியத்தில் இன்று 33,914 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மும்பை,
மராட்டிய மாநிலத்தில் கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த தினசரி கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் குறைந்து வருகிறது.
அதன்படி, மராட்டியத்தில் இன்று ஒரேநாளில் 33 ஆயிரத்து 914 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 75 லட்சத்து 69 ஆயிரத்து 425 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 30 ஆயிரத்து 500 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், மராட்டியத்தில் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 71 லட்சத்து 20 ஆயிரத்து 436 ஆக அதிகரித்துள்ளது.
மாநிலம் முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 3 லட்சத்து 02 ஆயிரத்து 923 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு இன்று 86 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மராட்டியத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 42 ஆயிரத்து 237 ஆக அதிகரித்துள்ளது.
Related Tags :
Next Story