ஜாண் டி ரோட்ஸ் - கிறிஸ் கெயிலுக்கு குடியரசு தின வாழ்த்துக்களை கூறிய பிரதமர் மோடி..!


ஜாண் டி ரோட்ஸ் - கிறிஸ் கெயிலுக்கு குடியரசு தின வாழ்த்துக்களை கூறிய பிரதமர் மோடி..!
x
தினத்தந்தி 26 Jan 2022 8:34 AM GMT (Updated: 26 Jan 2022 8:34 AM GMT)

பிரதமர் மோடி கிரிக்கெட் வீரர்கள் ஜாண் டி ரோட்ஸ் மற்றும் கிறிஸ் கெய்ல் ஆகியோருக்கு குடியரசு தின வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.

புதுடெல்லி,

பிரதமர் மோடி கிரிக்கெட் வீரர்கள் ஜாண் டி ரோட்ஸ் மற்றும் கிறிஸ் கெய்ல் ஆகியோருக்கு குடியரசு தின வாழ்த்துக்களை கடிதம் மூலமாக பகிர்ந்துள்ளார். இந்த கடிதம் சமூக வலைத்தள பக்கங்களில் பகிரப்பட்டுள்ளது.

குடியரசு தின வாழ்த்துச் செய்தியில் அவர் கூறியிருப்பதாவது:-

“பல ஆண்டுகளாக, நீங்கள் இந்தியாவுடனும் அதன் கலாச்சாரத்துடனும் ஆழமான தொடர்பை வளர்த்துள்ளீர்கள். இந்த மகத்தான தேசத்தின் பெயரை உங்கள் மகளுக்கு நீங்கள் வைத்தபோது இது உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.நீங்கள் உண்மையிலேயே எங்கள் நாடுகளுக்கு இடையிலான வலுவான உறவுகளின் சிறப்பு தூதர்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியப் பிரதமரின் செயலுக்கு ரோட்ஸ் மற்றும் கெய்ல் இருவரும் நன்றி தெரிவித்தனர்.

ஜாண் டி ரோட்ஸ் தனது டுவிட்டர் பதிவில்,  “அன்பான வார்த்தைகளுக்கு நன்றி நரேந்திர மோடிஜி. இந்தியாவுக்கு ஒவ்வொரு முறையும் வரும் போதும் நான் ஒரு தனி மனிதனாக மிகவும் வளர்ந்துள்ளேன். எனது முழு குடும்பமும் குடியரசு தின விழாவை இந்தியா முழுவதுடன் கொண்டாடுகிறது” என்று பதிவிட்டுள்ளார்.

அதைப்போலவே, இது தொடர்பாக டுவீட் செய்துள்ள கிறிஸ் கெய்ல், "இந்தியாவின் 73வது குடியரசு தினத்திற்கு வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன். இந்திய பிரதமர் மோடி அவர்களுடனும் இந்திய மக்களுடனும் எனது நெருங்கிய  உறவுகளை மீண்டும் உறுதிப்படுத்திய பிரதமர் நரேந்திர மோடியின் செய்தியைக் கேட்டு நான் மகிழ்ந்தேன்" எனத் தெரிவித்துள்ளார்.

Next Story