மாணவர் போலீஸ் படை சீருடையுடன் ஹிஜாப் அணிய கேரள அரசு அனுமதி மறுப்பு


மாணவர் போலீஸ் படை சீருடையுடன் ஹிஜாப் அணிய கேரள அரசு அனுமதி மறுப்பு
x
தினத்தந்தி 28 Jan 2022 4:29 AM GMT (Updated: 28 Jan 2022 4:29 AM GMT)

கேரளாவில் போலீஸ் துறையினரால் மாணவர் போலீஸ் என்ற தன்னார்வ படை திட்டம் செயல்படுத்தப்படுகிறது

திருவனந்தபுரம்

கேரளாவில் போலீஸ் துறையினரால் மாணவர் போலீஸ் என்ற தன்னார்வ படை திட்டம் செயல்படுத்தப்படுகிறது இதில் பள்ளி மாணவ  மாணவிகள் பங்கேற்று வருகின்றன.  

உயர்நிலைப் பள்ளி மாணவர்களை ஜனநாயக சமூத்தில் எதிர்கால தலைவர்களாக்குதல்,  சட்டம், ஒழுக்கம், குடிமை உணர்வு, சமூகத்தில் பாதிக்கப்படக்கூடிய பிரிவினருக்கு சேவை செய்தல் போன்ற நோக்கத்துடன்  மாணவர் போலீஸ் படை திட்டம் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.  மாணவ போலீஸ் படையில் சேரும் மாணவ மாணவிகளுக்கு சீருடையும் வழங்கப்படுகிறது. 

இந்த நிலையில், மாணவ போலீஸ் சீருடையுடன் ஹிஜாப் அணியவும் அனுமதிக்க வேண்டும் என 8 ஆம் வகுப்பு பயிலும் முஸ்லீம் மாணவி ஒருவர் விடுத்த கோரிக்கையை அம்மாநில அரசு நிராகரித்துள்ளது. 

இது தொடர்பாக கேரள மாநில அரசு கூறுகையில், “  சீருடையானது மாணவர்கள் பாலின நீதி, இன மற்றும் மத சார்பற்ற விஷயங்களில்  பாகுபாடின்றி பணியாற்றும் வகையில் இருக்க வேண்டும். 

மேலும் தற்போதைய சூழ்நிலையில் இது போன்ற சீர்திருத்தம் அதேபோன்று செயல்படும் மற்ற படைகளிலும் அதே கோரிக்கையை எழுப்பும், இது படைகளின் ஒழுக்கம் மற்றும் மதச்சார்பற்ற தன்மையை  கேள்விக்குள்ளாக்கும்” என்று தெரிவித்துள்ளது. 

Next Story