மத்திய பட்ஜெட்: பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம்


மத்திய பட்ஜெட்: பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம்
x
தினத்தந்தி 1 Feb 2022 10:32 AM IST (Updated: 1 Feb 2022 10:45 AM IST)
t-max-icont-min-icon

மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்று வருகிறது.

புதுடெல்லி,

2022-23 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்யப்பட உள்ளது. மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் காகிதமில்லா மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இது, மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 4-வது பட்ஜெட் ஆகும்.

இந்நிலையில், மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் பிரதமர் மோடி தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் மத்திய அமைச்சரவை கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட்டிற்கு அமைச்சரவை ஒப்புதல் அளிக்கிறது. 

இந்த அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, பாதுகாப்புத்துறை மந்திரி அமித்ஷா, ரெயில்வே, தகவல் தொடர்புத்துறை மந்திரி அஸ்வினி வைஷ்னவ், நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரஹல் ஜோஷி உள்பட முக்கிய மந்திரிகள் பங்கேற்றுள்ளனர்.

அமைச்சரவையின் ஒப்புதலுக்கு பின்னர் பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.

Next Story