“தமிழக அரசின் வேண்டுகோளை பரிசீலிக்க வேண்டும்” - ரவீந்திரநாத் எம்.பி. கோரிக்கை
நாடாளுமன்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் காணொலி வாயிலாக தேனி தொகுதி அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் கலந்து கொண்டார்.
புதுடெல்லி,
நாடாளுமன்ற இரு அவைகளின் கட்சி தலைவர்கள் கூட்டம், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது. இதில் அதிமுக சார்பில் தேனி தொகுதி மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் பங்கேற்றார்.
அப்போது பேசிய அவர், தமிழகத்தில் கொரோனா ஊரடங்கால் கடுமையாக பாதிக்கப்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் நலன்களை பாதுகாக்கும் வகையில் கடன் சலுகை, கடன் தடைகாலம் மற்றும் நிலுவை கடன்களை ஒத்திவைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். மேலும் இது தொடர்பான தமிழக அரசின் வேண்டுகோளை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Related Tags :
Next Story