இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ. 2.3 லட்சம் கோடியாக உயர்ந்து உள்ளது- பிரதமர் மோடி
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி தற்போது ரூ. 2.3 லட்சம் கோடியாக உயர்ந்து உள்ளது என பிரதமர் மோடி கூறி உள்ளார்.
புதுடெல்லி
பா. ஜனதா கட்சியின் தொண்டர்கள் மத்தியில் இன்று உரையாற்றிய பிரதமர் மோடி கூறியதாவது:-
மத்திய பட்ஜெட் ஏழை, நடுத்தர மக்கள், இளைஞர்களை கருத்தில் கொண்டும், அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் உருவாக்கப்பட்டது; அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதில் அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது.
இந்தியாவில் ஏதாவது ஒரு பகுதி அல்லது மாவட்டம் ஏழ்மையில் இருப்பது சரியானது அல்ல; பா.ஜ.க. இளைஞர்களின் கனவுகளை அறிந்த கட்சி, அது இந்த பட்ஜெட்டில் பிரதிபலித்துள்ளது.
தற்சார்பு என்ற அடித்தளத்தில் வருங்கால இந்தியா மிளிர வேண்டும்; இந்த பட்ஜெட் தற்சார்பு இந்தியாவை உருவாக்குவதற்கான பட்ஜெட்.
கடந்த ஏழு அல்லது எட்டு ஆண்டுகளில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 1 லட்சம் கோடிக்கு மேல் அதிகரித்துள்ளது.ஏழு-எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ. 1 லட்சத்து 10,000 கோடியாக இருந்தது. ஆனால் இன்று அது சுமார் ரூ.2 லட்சத்து 30,000 கோடியாக உள்ளது.
நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு கூட 200 பில்லியன் டாலரில் இருந்து 630 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. . இவை அனைத்திற்கும் எங்கள் அரசின் பயனுள்ள கொள்கைகளே காரணம்.
2013-14ஆம் ஆண்டில் இந்தியாவின் ஏற்றுமதி சுமார் 2 லட்சத்து 50,000 கோடி ரூபாயாக இருந்தது. ஆனால் இன்று ஏற்றுமதி 4 லட்சத்து 70,000 கோடியாக உள்ளது.
"ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியாவில் 275 பில்லியன் [அந்நியச் செலாவணி இருப்பு] கையிருப்பு இருந்தது, இன்று அந்நியச் செலாவணி கையிருப்பு சுமார் 630 பில்லியன்" என்று பிரதமர் மோடி கூறினார்.
இந்த கொரோனா காலங்களில் கூட, இந்தியா அதன் பொருளாதார ஸ்திரத்தன்மையால் உலகின் கவனத்தை ஈர்க்க முடிந்தது.
கடந்த 7 ஆண்டுகளில் விளையாட்டுக்கான பட்ஜெட் 3 மடங்கு உயர்ந்துள்ளது.விவசாயிகள் குடும்பத்து இளைஞர்களே விளையாட்டில் தேசத்தையே பெருமைப்படுத்துகிறார்கள் என கூறினார்.
Related Tags :
Next Story