“தேர்தலில் வெற்றி பெற்றால் நேர்மையாக இருப்போம்” - ஆம் ஆத்மி கட்சியினர் உறுதிமொழி
தேர்தலில் வெற்றி பெற்றால் நேர்மையாக இருப்போம் என ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்கள் உறுதிமொழி எடுத்தனர்.
பனாஜி,
கோவா சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்கள், ‘தேர்தலில் வெற்றி பெற்றால் கட்சிக்கு விசுவாசமாக, நேர்மையாக பணியாற்றுவோம்’ என உறுதிமொழி எடுத்தனர். இது தொடர்பான பிரமான பத்திரத்தில் வேட்பாளர்கள் அனைவரும் கையெழுத்திட்டுள்ளனர்.
இந்த பிரமான பத்திரத்தின் நகல் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கு அனுப்பப்படும் என ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். மேலும் வேட்பாளர்கள் நேர்மையாக பணியாற்ற தவறும் பட்சத்தில் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வாக்காளர்களுக்கு உரிமை வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
Related Tags :
Next Story