முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து ராகுல் காந்தி தமிழில் டுவீட்...!


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து ராகுல் காந்தி தமிழில் டுவீட்...!
x
தினத்தந்தி 3 Feb 2022 4:26 PM IST (Updated: 3 Feb 2022 4:56 PM IST)
t-max-icont-min-icon

உங்களின் கனிவான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி திரு மு.க.ஸ்டாலின் அவர்களே என ராகுல் காந்தி டுவீட் செய்துள்ளார்.

புது டெல்லி,

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியின் மக்களவை உரைக்கு தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்து தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டிருந்த பதிவில், 'இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கருத்தை அழுத்தமாக வெளிப்படுத்தி, நாடாளுமன்றத்தில் நீங்கள் ஆற்றிய உரைக்கு, அனைத்து தமிழர்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

சுயமரியாதையை மதிக்கும் தனித்துவமான கலாச்சார மற்றும் அரசியல் வேர்களில் தங்கியிருக்கும் தமிழர்களின் நீண்ட கால வாதங்களுக்கு பாராளுமன்றத்தில் நீங்கள் குரல் கொடுத்திருக்கிறீர்கள்' என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினின் டுவிட்டுக்கு, ராகுல் காந்தி நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

“நம் நாட்டின் மற்ற எல்லா மாநில மக்களைபோன்று, தமிழர்களும் என் சகோதர சகோதரிகளே! உங்களின் கனிவான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி திரு மு.க. ஸ்டாலின் அவர்களே! இந்தியாவின் பன்முகத்தன்மை கொண்ட, கூட்டாட்சி மற்றும் கூட்டுறவு யோசனையில் நமது பகிரப்பட்ட நம்பிக்கை வெற்றி பெறும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

Next Story