பள்ளிகள் திறப்பு: வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட மத்திய கல்வித்துறை அமைச்சகம்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 3 Feb 2022 5:59 PM IST (Updated: 3 Feb 2022 5:59 PM IST)
t-max-icont-min-icon

பள்ளிகளுக்கு நேரடியாக வருவது தொடர்பாக பெற்றோரின் ஒப்புதல் தேவையா என்பதை மாநில அரசுகளே முடிவெடுக்கலாம் என்று மத்திய கல்வித்துறை தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

கொரோனா தொற்று பரவல் 3-ஆவது அலை அதிகரிக்க தொடங்கியதன் காரணமாக கடந்த மாதம் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. 

இந்த சூழலில் தற்போது வைரஸ் பரவலின் தாக்கம் சற்று குறைந்த நிலையில் மீண்டும் பள்ளி மற்றும் கல்லூரிகளை திறக்க மத்திய் அரசு முடிவெடுத்திருந்தது. 

இந்நிலையில் பள்ளிகள் திறப்பது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய கல்வித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. 

இதன்படி மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும், பள்ளிகளுக்கு குழந்தைகள் நேரடியாக வருவது தொடர்பாக பெற்றோரின் ஒப்புதல் தேவையா என்பதை மாநில அரசுகளே முடிவெடுக்கலாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாற்றியமைக்கப்பட்ட வழிகாட்டுதல்களில், கூடுதல் ஆதரவு தேவைப்படும் மாணவர்கள் மீது ஆசிரியர்கள் கவனம் செலுத்தும் வகையில், அவர்களின் கற்றல் நிலைகளின் அடிப்படையில் குழந்தைகளை அடையாளம் காணவும் மத்திய அரசாங்கம் பரிந்துரைத்துள்ளது. 

Next Story