டெல்லியில் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறப்பு - இரவு ஊரடங்கு தொடரும்
தலைநகர் டெல்லியில் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளது.
டெல்லி,
தேசிய தலைநகர் டெல்லியில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் ஜனவரி மாதம் நடந்த கடைசி கூட்டத்தில், வார இறுதி ஊரடங்கை நீக்கியது. மேலும் பார்கள் மற்றும் உணவகங்கள் 50 சதவீத இருக்கைகளுடன் செயல்பட அனுமதித்தது.
இந்த நிலையில் தற்போது டெல்லியில் உடற்பயிற்சி நிலையங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பயிற்சி நிறுவனங்களை மீண்டும் திறக்க அனுமதிக்க டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் முடிவு செய்துள்ளது. மேலும் நகரத்தில் இரவு 10 மணிக்குப் பதிலாக இரவு 11 மணி முதல் இரவு ஊரடங்கு தொடரும் என்று தெரிவித்துள்ளது.
மேலும் அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகள்:-
கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி படிப்படியாக பள்ளிகள் திறக்கப்படும். 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை, பிப்ரவரி 7-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். தடுப்பூசி போடாத ஆசிரியர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
15-18 வயதுக்குட்பட்டவர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் பணி மேம்படுத்தப்படும்
அலுவலகங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்
கார்களில் ஒற்றை ஓட்டுநர்களுக்கு முக கவசம் அணியும் விதியிலிருந்து விலக்கு அளிக்கப்படும்
உடற்பயிற்சி நிலையங்கள் கட்டுப்பாடுகளுடன் திறக்கப்படும்
Related Tags :
Next Story